ETV Bharat / international

கொரோனா பாதிப்பு - சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென்கொரியா!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தப்படியாக தென் கொரியா இருக்கிறது. அங்கு 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

coronavirus
coronavirus
author img

By

Published : Feb 26, 2020, 4:04 PM IST

கொரோனா வைரஸ் சீனாவை ஆட்டிப்படைக்கிறது. இது மற்ற உலக நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்திவருகிறது. உலக சுகாதார அமைப்பு, அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சீன அரசோ கொரோனாவைக் கட்டுப்படுத்த திணறிவருகிறது. இதனால், சீனாவில் வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதார சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரம் கொரோனாவால் முற்றிலும் முடங்கிபோய் கிடக்கிறது. கொரோனாவுக்கு எதிராக இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டுதான் செல்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென்கொரியா நாடு உள்ளது. அங்கு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, அமெரிக்க ராணுவ வீரர் உள்பட 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 169 பேரில், 134 பேர் தேகு எனும் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். அங்குள்ள சின்சியோஞ்சி எனும் தேவாலயத்தில் இருந்தே அதிகமானோருக்கு கொரோனா பரவியதாகக் கூறப்படும் நிலையில், தேவாலயத்துடன் தொடர்புடைய சுமார் இரண்டு லட்சம் பேரை பரிசோதனை செய்ய அந்நாட்டு சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிர்ச்சி : ஈரான் சுகாதாரத் துறை இணை அமைச்சருக்கு கொரோனா !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.