தெற்கு ஜெர்மனியின் பாவிரியா நகரிலுள்ள இரண்டு மசூதிகளிலுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு மசூதிகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் சந்தேகிக்கப்படும் பொருட்கள் ஏதும் தென்படவில்லை. எனினும், அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோன்று, மேற்கு ஜெர்மனியின் ஜசர்லோன் நகரிலுள்ள மசூதி ஒன்றிற்கும் வெடிகுண்டு மிரட்டல், மின் அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டது. பின்னர், இது வெறும் புரளி என்று தெரியவந்தது. எனினும், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்தாண்டில் இதுவரை நியூசிலாந்து, இலங்கை, பர்கினோ பாசோ ஆகிய நாடுகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.