உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை 6 கோடியே 13 லட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 96ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 48 ஆயிரத்து 498ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 16 பேர் உயிரிழந்தனர்.
உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 560 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமாக உள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்பை இதுவரை சந்தித்துள்ளன.
இதையும் படிங்க: தேங்க்ஸ் கிவ்விங் டே சமையல் ரெசிபியை பகிர்ந்த கமலா ஹாரிஸ்