பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து ஐநா சார்பில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பருவநிலை மாற்ற உச்சிமாநாடு (United Nations Change Conference COP25) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'ஃபிரைடே ஃபார் ஃபியூசர்' ( Friday For Future) என்ற பருவநிலை மாற்ற இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் உச்சிமாநாடு நடைபெறும் வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சேர்ந்து எக்ஸ்டிங்க்ஷன் ரெபலியன் (Extintinction Rebellion) உள்ளிட்ட பருவ நிலைக் குழுக்களும் ஈடுபட்டனர்.
அப்போது, உலக நாடுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், COP25 நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகே உள்ள ரவுண்டானவை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
200 நாடுகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் பருவ நிலை மாற்றம் குறித்து ஒப்பந்தம் எட்டுவது குறித்து பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : மீண்டும் உயர் நீதிமன்றம் வருகிறது ஸ்டெர்லைட் படுகொலை வழக்கு!