பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இம்மாதத் தொடக்கத்தில் கோவிட்- 19 உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் சில நாள்கள் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டு வழக்கமாக பணிகளில் ஈடுபட்டார். ஆனால் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்த அவர், ஏப்ரல் இரண்டாவது வாரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களாக அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார்.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவார் என்று ஸ்கை (sky) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனையைப் பொறுத்து அவர் தினசரி செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் சர்வதேச தலைவர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் இதுவரை சுமார் 1,50,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 20,319 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா கடுமையாக பாதித்த நாட்டில் ஊரடங்கு தளர்வு!