பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (55), 32 வயதான கேரி சைமண்ட்ஸ் என்ற இளம்பெண்ணை காதலித்துவந்தார். இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்நிலையில் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு புதன்கிழமையன்று (ஏப்.29) அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை பிரதமர் அலுவலக வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. போரிஸ் ஜான்சனுக்கு, அவரது முதல் மனைவி மரீனா என்பவர் மூலம் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார்.
இங்கிலாந்தில் பிரதமர் பதவியை அலங்கரிப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது இது முதல்முறையல்ல. இதுற்கு முன்னர் முன்னாள் பிரதமர்களான டோனி பிளேர் மற்றும் டேவிட் கேமரூன் ஆகியோர் வாழ்விலும் இவ்வாறு அதிசயம் நிகழ்ந்துள்ளது. போரிஸ் ஜான்சன், கடந்த மாதம் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய போரிஸ் ஜான்சன், வீட்டிலிருந்தப்படி அலுவலகப் பணிகளை கவனித்துவந்தார். முன்னதாக, போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் ஜோடி தங்களுக்கு கோடை விடுமுறை பரிசாக குழந்தை ஒன்று கிடைக்கும் என்று கூறினர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற அமெரிக்க துணை அதிபர்!