இது குறித்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வகம் (USGS) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினாவின் சான் அன்டோனியோ டி லாஸ் கோப்ரெஸில் 6.3 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை (டிச. 01) நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
அதேபோல ரஷ்யாவின் சோவெட்ஸ்காயா கவானின் தென்கிழக்கில் 88 கி.மீ. வரை, 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது" எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்களினால் உயிரிழப்புகள், சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்