ETV Bharat / international

சீன ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை- நிபுணர் குழு - உலக சுகாதார அமைப்பு

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

beijing
பெய்ஜிங்
author img

By

Published : Feb 10, 2021, 3:24 PM IST

உலகளவில் இதுவரை கரோனாவால் 10 கோடியே 74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 23.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து தான் பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. இதைக் கருத்தில் கொண்டு, கரோனா வைரசின் தோற்றம் குறித்துக் கண்டறிய உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொண்டது. தற்போது, அந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.

முடிவுகளின்படி, 2019 டிசம்பருக்கு முன்னர் வூஹானில் அல்லது வேறு எங்கும் கரோனா உடன் தொடர்புடைய பெரிய நோய்த்தொற்று குறித்து குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எந்த விலங்கிலிருந்து கரோனா தொற்று பரவியது? என்பது குறித்த அடையாளம் காணப்படவில்லை. ஆய்வக கசிவினால் கரோனா பரவியது என்பது மிகவும் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் எம்பாரக் கூறுகையில், " கரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, தற்செயலாக அங்கிருந்து வெளியேறி பொதுமக்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இன்னும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

விஞ்ஞானிகள் கூற்றுப்படி, பாங்கோலின் அல்லது மூங்கில் எலி போன்ற காட்டு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கரோனா சென்றிருக்கலாம். அதே போல், வௌவால்களிலிருந்து மனிதர்களுக்கு நேரடியாக அனுப்புவது அல்லது உறைந்த உணவுப் பொருள்களின் வர்த்தகம் மூலமாகவும் பரவியிருக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மியான்மர் அரசியல் சூழல் குறித்து இந்தியா-அமெரிக்கா முக்கியப் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.