23 வயதான மனிர் ஹொசைன் என்பவர் 2018ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் பணியாற்றிவந்துள்ளார். ஹொசைன் இறந்தது குறித்து அவரது தாத்தா அப்துல் ரஹீமிடம் அந்நாட்டு அலுவலர்கள் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.
தனது பேரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றதாகவும் தற்போது மலேசிய அலுவலர்கள் தன்னிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பேரனின் உடலைப் பத்திரமாக இந்தியாவிற்கு எடுத்துவர உதவுமாறும் இந்திய, மலேசிய அரசுகளிடம் ரஹீம் கோரிக்கைவைத்துள்ளார்.
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸால், அந்நாட்டைச் சேர்ந்த 170 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பிற நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ‘தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்’