ஜி20 நாடுகளின் 14ஆவது உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் தான் மானுடத்தின் மிகப்பெரிய அச்சுறுதல் என்றும், அது அப்பாவி உயிர்களின் பலிக்கு காரணமாக மட்டுமல்லாது பொருளாதார வளர்ச்சி, சமூக நல்லிணக்கத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவல்லது எனவும் கூறினார்.
ஆகவே, பயங்கரவாதத்துக்கும், இனவெறிக்கும் செல்லும் உதவிகளை நாம் தடுத்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய மோடி, "வணிக, நிதி நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும். எரிவாயு, எண்ணெய் ஆகியவை குறைந்த விலைகளில் கிடைக்க வேண்டும். வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் வங்கிகளுக்கு மாற்று எரிசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
அதேபோல், திறன்மிக்க தொழிலாளர்கள் உலகெங்கும் இடம்பெயர்தலை எளிமையாக்குவது குறித்து உரையாற்றிய மோடி, அது முதுமையானவர்களை அதிமாக வைத்திருக்கும் நாடுகளுக்கு உதவியாக அமையும் என்றும் கூறினார்.