ETV Bharat / international

ஒரு வழியாக குறைந்த கரோனா பாதிப்பு: நிம்மதி பெருமூச்சுவிடும் சிங்கப்பூர்! - சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்துவந்த கோவிட்-19 பாதிப்பு நேற்று முதன்முறையாகக் குறைந்துள்ளது.

Singapore
Singapore
author img

By

Published : May 10, 2020, 11:18 AM IST

சீனாவின் வூஹான் மாநகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மற்ற நாடுகளில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

தென் கிழக்கு ஆசியாவில் கோவிட்-19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. குட்டி நாடான சிங்கப்பூரில் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்துவந்தது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்று அந்நாட்டு அரசு அச்சம்கொண்டது.

இந்நிலையில், சில வாரங்களுக்குப் பின் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் சனிக்கிழமை முதன்முறையாகக் குறைந்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிக்கிழமை 753 பேருக்கு மட்டும் புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 739 பேர் வெளிநாட்டினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை கோவிட்-19 தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 296 பேர் குணமடைந்துள்ளதாகவும் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் 19 ஆயிரத்து 20 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் இதுவரை 22 ஆயிரத்து 460 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கரோனா பரவல் குறைவதையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வீட்டிலிருந்து உணவு தயாரித்து விநியோகிப்பவர்களும் முடித்திருத்துபவர்களும் மே 12ஆம் தேதிமுதல் தங்கள் தொழிலைத் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 19ஆம் தேதிமுதல் குறைந்த மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் தங்கள் வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நிலையான சிகிச்சை மூலம் கரோனா நோயாளிகளை மீட்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.