2016ஆம் ஆண்டு தன் அரசுபோதைப்பொருள்களுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியதாக பிலிப்பைன்ஸ் பிரதமர் ராட்ரிகோ டியுட்டர்ட் அறிவித்திருந்தார். இந்த தாக்குதலில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் துறையினரால்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து 2018ஆம் ஆண்டு போர் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராட்ரிகோ டியுட்டர்ட் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு, மேற்கொண்டு எந்த ஒத்துழைப்பும் வழங்க முடியாதென பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. போர் குற்றவியல் தீர்ப்பாயத்திலிருந்து வெளியேறுவதாகவும் பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, போர் குற்றவியல் தீர்ப்பாயத்திலிருந்து 2017ஆம் ஆண்டுபுர்னே நாடு வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.