ETV Bharat / international

கரோனா: இந்திய எல்லையை மூடிய நேபாள் - இந்தியா - நேபாள் உறவு

காத்மாண்டு: இந்தியர்கள் முறையான பரிசோதனை மேற்கொள்ளாமல் நேபாளுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைப் பகுதியை மூடுவதாக அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

Nepal
Nepal
author img

By

Published : May 25, 2020, 10:33 PM IST

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள நேபாள் நாட்டில் கரோனா பாதிப்பின் விவரம் குறித்து அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று பேசினார். அதில், அந்நாட்டு அரசு கரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த அனைத்து முயற்சியும் எடுத்துவருவதாகவும், உயிரிழப்பு மற்ற தெற்காசிய நாடுகளைக் காட்டிலும் நேபாளில் மிகக்குறைவு எனத் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தியாவில் இருந்து வருபவர்களால் நேபாளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாக புகார் தெரிவித்த அவர், இந்தியர்கள் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் நேபாளுக்குள் நுழைகின்றனர் என்றார்.

இதைத் தடுக்கும் விதமாக அந்நாட்டின் தலைநகரான நேபாளுக்குள் நுழையும் அனைத்து எல்லைகளையும் மூடுவதாகத் தெரிவித்துள்ளார். நேபாளில் இதுவரை 682 பேர் கரோனாவில் பாதித்துள்ள நிலையில், நேற்று (மே 24) ஒரே நாளில் அதிகபட்சமாக 79 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'ஊரடங்கு நீட்டிப்பு மருத்துவ நெருக்கடியை உருவாக்கியுள்ளது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.