முல்தான்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு நிதி உதவி வழங்கியதாக மாலிக் ஜாபர், சலாம் பட்வி மற்றும் அப்துல் ரகுமான் மக்கி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பாகிஸ்தான் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் மூவரையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைதுசெய்தனர்.
இவர்கள் மீதான விசாரணை முல்தான் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பயங்கரவாதத்துக்கு பண உதவி செய்த மாலிக் ஜாபர், சலாம் பட்வி ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகளும், அப்துல் ரகுமான் மக்கிக்கு 18 மாதங்களும் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்பு அளித்தார்.
2008ஆம் ஆண்டு மும்பை வீதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: நவாஸ் ஷெரிப் விவகாரத்தில் தவறு செய்துவிட்டேன் - இம்ரான் கான்