பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் டிக்டாக் செயலிக்கு தடை(TikTok Ban) விதிக்கப்பட்டது. இந்த செயலியில் ஆபாசமான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது எனக் கூறி பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த தடையை விதித்தது.
இந்நிலையில், டிக்டாக் செயலி பாகிஸ்தானில் மீண்டும் செயல்பட(Tiktok in Pakistan) அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்டாக் நிறுவனம் இது குறித்து தொடர்பு கொண்டு விதிமீறலான பதிவுகளை நீக்குவோம் என உறுதியுள்ளதுள்ளது. எனவே, அதன் மீதான தடையை நீக்க முடிவெடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் 3.9 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்திவருகின்றனர். டிக்டாக் செயலியில் சாகசம் செய்வதாகக் கூறி பல இளைஞர்கள் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக எழுந்த புகாரின் காரணமாக நீதிமன்றம், அரசு தலையிட்டு செயலிக்கு தடை விதித்து.
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 60 லட்சம் காணொலி பதிவுகளை டிக்டாக் பாகிஸ்தான் அரசின் உத்தரவை ஏற்று நீக்கியுள்ளது.
இதையும் படிங்க: சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொண்ட சீனா - அதிர்ச்சியில் அமெரிக்கா