பாகிஸ்தானின் கடலோர மாவட்டமான குவாடரின் கன்ஸ் பகுதியில் அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த அலுவலர்கள் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கடற்படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பயங்கரவாதிகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் கப்பல் மாலுமி, கடற்படை வீரர் என இரண்டு பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையே, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைச் சுற்றி வளைத்து, பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வந்த பாகிஸ்தான் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், பயங்கர ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : கணித ஜாம்பவான்... இங்கிலாந்துக்காகக் களமிறங்கும் இந்திய வம்சாவளி சிறுமி