கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்துவரும் நிலையில், பாகிஸ்தானிலும் அதன் தாக்கம் தீவிரமடைந்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அந்நாட்டில் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மத வழிபாட்டுத் தலங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டு மத குருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் வழிபாட்டு நடவடிக்கையில் அரசு இவ்வாறு தடை விதிக்கக்கூடாது எனவும், அரசின் இந்த முடிவுகள் மசூதிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இறைவன் தங்கள் பக்கம் இருக்கும் போது வைரஸ் தங்களை பாதிக்காது எனவும், மேலை நாட்டுமக்களை போல் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இறைவன் பாதுகாப்பார் எனவும் அந்நாட்டு மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: இனி நிதி கிடையாது; உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் செக்