அணு ஆயுதம், ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டு சர்ச்சை நாயகனாக வலம்வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில வாரங்களாக வெளியில் தலைகாட்டவில்லை.
ஏப்ரல் 15ஆம் தேதி அவரது தாத்தாவும், வடகொரியாவைத் தோற்றுவித்தவருமான கிம் சுங்கின் 108-வது பிறந்தநாள் தின கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்காமல் போனது உலக அரசில் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. (2011ஆம் ஆண்டில் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து ஒருமுறைகூட கிம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் தவறியதில்லை)
இதனிடையே, உடல்நலக் கோளாறு காரணமாக கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, புதன்கிழமை அன்று வடகொரியா அரசு ஊடகம் அதிபரின் கடந்தகால அறிக்கைகளைத் தவிர சந்தேகத்திற்கிடமான நிகழ்வேதும் நடந்ததாக அறிவிக்கப்படவில்லை என தென் கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் வட கொரியாவின் எதிர்காலம் குறித்து அனைவரது மனதிலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் சியோங் சியோங் சாங் கூறுகையில், "வடகொரியாவில் உள்ள சக்திவாய்ந்தவர்களுள், கிம் யோ ஜோங் அந்நாட்டின் அடுத்த அதிபராக 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ராஜக் குடும்பத்தைச் சேர்ந்த கிம் யோ ஜாங் அதிபரானால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்" என்றார்.
இதையும் படிங்க : வூஹானின் யாங்ஸி நதியில் மீண்டும் படகு சேவை
!