சீனா நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் முறையான நடவடிக்கை எனவும் அந்நாட்டின் சொந்த விவகாரம் எனவும் வடகொரிய தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஹாங்காங் சீனாவின் இரண்டு சிறப்புப் பிராந்தியங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது.
பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகள் மட்டும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசு நிர்வகித்துவருகிறது. ஆனால், ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்தே அதனைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவர வேண்டும் எனச் சீன அரசு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. இதனை எதிர்த்தும், ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கக் கோரியும் ஹாங்காங் மக்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிவரும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி சீன அரசு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் நோக்கில் தேசியப் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவரும் வேளையில் இறங்கியது. இந்த மசோதாவானது சீனா நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேறியுள்ளது. இது ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கத் தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தைச் சீன அரசுக்குத் தருகிறது.
சீனாவின் இந்தப் புதிய சட்டம் ஹாங்காங் மாகாணத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாகக் கூறி அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றஞ்சாட்டிவருகின்றன. ஆனால் சீனாவுக்கு ஆதரவான குரலை அதன் நட்பு நாடான வடகொரிய தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி இவர்களுக்கு பதில் செற்கை நுண்ணறிவு வேலை செய்யும்...! 50 பேருக்கு வேலை கட்