ETV Bharat / international

கொ.. கொ... கொரோனா...! எவரெஸ்ட் சிகர பயணம் ரத்து.! - எவரெஸ்ட் சிகர பயணம் ரத்து

காத்மாண்டு: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக எவரெஸ்ட் உள்ளிட்ட மலையேற்றத்தை நேபாளம் ரத்து செய்துள்ளது.

Eevrest expedition COVID-19 Coronavirus outbreak Coronavirus in Nepal Nepal suspends expeditions to Everest எவரெஸ்ட் சிகர பயணம் ரத்து கொரோனா வைரஸ், நேபாள விசா நிறுத்தம், கொவிட்19

author img

By

Published : Mar 13, 2020, 2:53 PM IST

கொரோனா வைரஸ் என்ற கொவிட் 19 வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதனால் உலக நாடுகள் விசா உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளனர். இந்த தொற்று நோயினால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) வரை அனைத்து வெளிநாட்டுக்கும் விசாவை நிறுத்துவதாக நேபாளம் அறிவித்துள்ளது. முன்னதாக சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விசாவை நேபாள அரசு நிறுத்தியது.

இதற்கிடையில் எவரெஸ்ட் சிகர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “நேபாளமும் இந்தியாவும் ஒரு நுண்ணிய எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே 100 க்கும் வழிகள் உள்ளன.

இந்நிலையில் தற்போது மலையேற்றத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்றார்.

இமயமலை நாடான நேபாளம், எவரெஸ்ட் மலையேற்றத்தின் மூலம் பெருமளவு அன்னிய செலாவணி வருவாய் ஈட்டிவருகிறது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராதப்பட்சத்தில் இது தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: நீண்ட கால மௌனம் ஏன்? மரியம் நவாஸ் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.