யங்கூன்: மியான்மரில் புதிய அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. இது மியான்மர் மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்திலும் கவனத்தை ஈர்த்தது.
இதற்கிடையில், மியான்மரில் உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாட்டில் இணைய சேவை சில பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், நாட்டில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே சில காலத்திற்கு மியான்மரில் பேஸ்புக்கை முடக்கவும் டெலினோர் மியான்மர் என்ற அமைப்பு தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்தது.
பேஸ்புக் உள்ளிட்டவற்றை தடை செய்வது மனித உரிமை மீறல். எனினும், மியான்மரின் சூழலைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்கு மட்டும் பேஸ்புக்கை முடக்குவதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.