ETV Bharat / international

மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வர் இப்ராஹிம் ? - மெலேசியா பிரதமர்

கோலாலம்பூர் : கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் தன்னை பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று மக்கள் நீதி கட்சி தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

anwar ibrahim, அன்வர் இப்ராஹிம்
anwar ibrahim
author img

By

Published : Feb 27, 2020, 11:42 AM IST

மலேசியாவில் 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சி, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சி மற்றும் மேலும் சில சிறிய கட்சிகளைச் சேர்த்த 'Pact of Hope' என்ற கூட்டணி அமோக வெற்றிபெற்றது.

இதையடுத்து, மகாதீர் முகம்மது அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக, கூட்டணிப் பேச்சுவார்தையின் போது தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவி வகித்த பிறகு, அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக மகாதீர் வாக்களித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இம்பராஹிமிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு அவரது ஆதரவாளர்கள் மகாதீரை வலியுறுத்தினர்.

ஆனால், அடுத்த நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டைத் தொடர்ந்தே ஆட்சியை ஒப்புடைப்பேன் என மகாதீர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதன் காரணமாக, ஆளுங்கட்சி கூட்டணியில் வரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 24) பிரதமர் மகாதீர் முகம்மது திடீரென தனது பதிவிலியிருந்து விலகுவதாகக் கூறி அந்நாட்டு அரசரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

இச்சூழலிக்ல், கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் தன்னை பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று மக்கள் நீதி கட்சி தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம்' - அரசு அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.