நேபாளம், இந்தியாவிடமிருந்து தெளிவாக விலகிச் செல்கிறது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகார்க் பகுதியில் 400 சதுர கி.மீ. இடத்தைச் சொந்தம் கொண்டாடும் அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டதால் இந்தியா தனது ஆட்சியைக் கலைக்க திட்டமிடுகிறது என்று நேபாள பிரதமர் ஷர்மா ஒலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில் நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவில் உள்ள நேபாளத்தின் முன்னாள் பிரதமர்கள் புஷ்பா கமால் தாஹால் பிரசாந்தா, மாதவ் குமார் நேபாள், ஜல்நாத் கானல் ஆகிய மூவரும் பிரதமர் ஒலியைப் புறக்கணித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராகக் குற்றசாட்டு வைப்பதற்கு வலுவான ஆதாரம் இருந்தால் அதனை வெளியிடுங்கள் என்று கேட்கின்றனர். ஆதாரத்தைச் சமர்பிக்க முடியாவிட்டால், பிரதமர் பதவியிலிருந்தும், கட்சியின் துணைத்தலைவர் பதவியிலிருந்தும் விலகும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் உள்அதிகாரப் போட்டிகள் , இந்தியா மற்றும் இதர நாடுகளுடனான அந்த நாட்டின் உறவு ஆகியற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவரது கட்சியில் உள்ள மூத்தத் தலைவர்கள் மீதான அச்சத்தின் காரணமாக, அனைத்து அதிகாரங்களையும் தமது கைகளிலேயே வைத்திருக்கிறார் பிரதமர் ஒலி.
இதனால்தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்சியின் துணைத்தலைவரான பிரசாந்தா, முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது, பிரதமர் ஒலி தம்மை கலந்தாலோசித்து நம்பிக்கையுடன் முடிவுகள் எடுக்க மறுக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார். கட்சியின் வெளிநாட்டு உறவுகளைக் கவனிக்கும் மாதவ் நேபாளின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாமல் கடந்த மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைகள் மேற்கொண்டது.
பிரதமர் ஒலி விதிமுறையை மீறி கட்சியின் இரண்டு முக்கியப் பொறுப்புகளையும் அவரது கையில் வைத்திருக்கிறார். கட்சியின் நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்களில் நேரடியாகவோ, அல்லது தமது ஆதரவாளர்கள் மூலமாகவோ தலையிடுகிறார். ஆட்சியிலும் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. கோவிட்-19 சிக்கலைச் சமாளிப்பதாகட்டும், ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல் என ஆட்சியின் அனைத்து மட்டத்திலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். இதனால், ஆட்சிக்கும் கட்சிக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துவருகிறது. எதிர்காலத்தில் அதன் ஆதரவு தளமும் அழிந்துவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எம்.சி.சி. திட்டத்தின் கீழ் நேபாளத்துக்கு அமெரிக்கா 500 மில்லியன் டாலர் உதவி வழங்குவதை ஆதரிப்பதற்கு ஒலி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
தம்மை எதிர்க்கும் தலைவர்களின் முயற்சிகளால் கட்சிக்குள் தாம் தனிமைப்படுத்தப்படுவதை ஒலி சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார். இந்திய விரோத தேசியவாதத்தை வெளிக்கொண்டுவர சீனாவின் ஆதரவையும் ஒலி கோருகிறார். 2015ஆம் ஆண்டு புதிய அரசியல் சட்ட வரைவை உருவாக்கியபோதும், 2017ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதே போல செய்தார்.
இப்போது மீண்டும் இந்த வரைபட விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் டியூபாவின் மறைமுக ஆதரவையும் அவர் பெற்றிருப்பதாக நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. வரைபட விவகாரம் மற்றும் இந்தியப் பகுதிகளுக்குச் சொந்தம் கொண்டாடுவது என்பதை இந்திய எதிர்ப்பு நேபாள தேசியவாதத்துக்கு உபயோகப்படுத்தி, கட்சிக்குள்ளும், வெளியேயும் தம்மை விமர்சிப்பவர்களை அமைதியாக்கும் வகையில் தம்மை ஒரு தீவிர தேசியவாத கதாநாயகனாக ஒலி வெளிப்படுத்திக் கொள்கிறார்.
தம்முடைய குறுகிய அரசியல் கண்ணோட்டத்துக்காக நேபாளின் தேசியவாதத்தைக் கையாண்டதால், மூன்று அம்சங்கள் எளிதாக வளர்வதற்கு ஒலி காரணமாகி விட்டார். இளமை, ஆர்வம், நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டதாக, அதன் உண்மையான அடையாளத்தைக் கொண்டதாக புதிய நேபாளம் இருக்க வேண்டும். மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இளம் நேபாளிகள்.
இந்த எண்ணிக்கை ஜனநாயக முறைக்கு அதிகாரம் படைத்ததாக இருக்கிறது. இணையம் மற்றும் இடப்பெயர்வின் வழியே உலகம் முழுவதற்கும் அவர்கள் பெருமவில் வெளிப்படுத்துகின்றனர். கல்வி கற்றவர்களாக, திறன் மிக்கவர்களாக மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
கலாசாரம், நாகரிகமான இணைப்புகள் மூலம் இந்தியாவை நோக்கி அவர்கள் நகரவில்லை. இந்தியா உடனான உறவு சரியானதாக இல்லை, சிறப்பான, தனித்தன்மை வாய்ந்த கருத்தால் ஈர்க்கப்படவில்லை. இது அனைத்தும் இருந்திருந்தால், தங்களது வசதியான வாழ்க்கைக்கு, தங்களின் வளர்ச்சி எனும் ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் இந்தியாவை நோக்கி பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். இதைக் கருத்தில் கொள்ளத்தான் இந்தியா தவறிவிட்டது.
இது இரண்டாவது அம்சமாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களைக் கருத்தில்கொண்டு, தீவிரமான எந்த ஒரு முக்கிய வளர்ச்சி திட்டங்களையும் நேபாளில் இந்தியா மேற்கொள்ளவில்லை. மனநிறைவு, அலட்சியம் மற்றும் கட்டாய ராஜதந்திரத்தின் மூலம் நேபாளின் உள்நாட்டு விவகாரங்களில் ஒவ்வொரு பகுதியையும் கட்டுபடுத்தக் கோரும் நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் நேபாளின் அரசியலமைப்புச் செயல்பாடுகளில் இந்தியா தந்திரமான முறையில் தலையிட்டது. இதன் தொடர்ச்சியாக ஐந்து மாதங்களுக்குப் பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்டது. அது நேபாளின் இயல்பு வாழ்க்கையைக் குலைத்தது.
இதுதான் இந்தியாவின் அண்மைக்கால தலையீடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த இந்தியாவின் தூதரக தவறுகள் நேபாளத்தில் இருக்கும் பொதுவான மக்களை அந்நியப்படுத்தியது. 2015ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் ஒலியின் தலைமைக்கும் மற்றும் நேபாளின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகவும் இந்தியா இருக்கவில்லை. நேபாளத்துடனான வலுவான பின்னடைவின் காரணமாக அந்நாட்டின் ஆளும் அதிகாரத்தை நோக்கி இந்தியா மென்மையான போக்கையைக் கடைப்பிடிக்க முயற்சித்தது.
எண்ணெய்க் குழாய் அமைத்தல், ரயில்வே பாதைகள், சாலை உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் திட்டங்களை விரைவுப்படுத்த இந்தியா முயற்சித்தது. ஆனால், இவையெல்லாம் ஆளும் கட்சியிடம் அல்லது நேபாளி தேசியவாதத்தின் இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு நிலையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
இந்தியா-நேபாள் இடையேயான இடைவெளியை அதிகரிக்கும் வாய்ப்பை சீனா முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. சீன துறைமுகங்கள் மூலம் மாற்று வணிகப் பாதையை நேபாளுக்கு சீனா வழங்க முன்வந்தது. நேபாளை ஆசியாவின் பிற நாடுகளுடன் இணைக்கக்கூடிய பெல்ட், சாலை வசதி முயற்சி திட்டங்களின் வழியே நேபாளின் கட்டமைப்புகளை வளர்த்தெடுக்க லட்சகணக்கான டாலர்களை சீனா முதலீடு செய்தது. சீனா தம்மிடம் உள்ள ஏராளமான நிதியின் மூலம் நேபாளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை கருத்தில்கொண்டு ஒட்டுமொத்த அரசியலிலும் வியாபிக்கும் வகையில் நேபாளில் அரசியல் முறைகேட்டை ஊக்குவித்தது.
இதனால்தான் நேபாளத்துக்கான சீன தூதுவர் அண்மைக்காலமாக நேபாள ஊடகங்களில் அடிக்கடி செய்தியாகிறார். நேபாளின் முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து, கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒலி அரசு வலுவாக இருக்க உதவ முன்வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த கலபானி பகுதிக்கு நேபாள் உரிமை கோரும்போதும், புதிய வரைபடம் குறித்தும் கேள்வி எழும்போதும், நேபாளைச் சீனா வெளிப்படையாக ஆதரிக்காது.
1954 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையே வணிக மற்றும் கலாசார போக்குவரத்துக்கான ஆரம்பப் புள்ளியாக லிபுலெக் பகுதியை சீனா அங்கீகரித்திருக்கிறது. நேபாளத்தில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் உத்தியை ஒருங்கிணைக்க, சீனாவின் ஆர்வம் மற்றும் இ்ந்திய-நேபாளத்துக்கு இடையேயான வித்தியாசங்களை நேபாளம் தமக்கு வசதியாகப் பயன்படுத்துகிறது.
வலுவான பொருளாதார, சமூக, கலாசார உறவுகள் ஆகியவற்றுக்கு இடையே நேபாளில் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பது என்பது இந்தியாவுக்கு பெரும் அளவில் கடினமாக இருக்கலாம். நேபாளுடனான அதன் அணுகுமுறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. வளர்ந்துவரும் அரசியல் தந்திரங்களுடன் உருவெடுத்துவரும் இமாலாயத்தின் அண்டை நாட்டுடன் மேலும் உணர்வுப்பூர்வமாகவும் , மற்றும் இணக்கமானதுடன் கூடிய தூதரக உறவை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இமாலாயத்தில் இருக்கும் அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டிருக்கும்போதெல்லாம் சீனா எப்போதுமே ஒரு வலுவான அச்சுறுத்தலாகவே இருந்து வருவதை வரலாறு பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: 'எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவின் உறவை கைவிட மாட்டோம்' - இம்ரான் கான்