அமெரிக்க அதிபரின் உத்தரவின்பேரில் பாக்தாத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ராணுவத் தளபதி காசிம் சுலைமான் குறித்து அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் தகவல் அளித்ததாக முகம்மது மௌசவி மஜித் என்பவரிடம் ஈரான் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
விசாரணையில், இவர் சுலைமானியின் பயணத் தகவல்களை வெளியிட்டதாகவும், இவர் குட்ஸ் என்றழைக்கப்படும் பயணப் பிரிவின் பாதுகாப்புத் தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
நுண்ணறிவுப்பிரிவு மற்றும் மொசாட் அமைப்பினருடன் முகம்மது மௌசவி மஜித் தொடர்பிலிருப்பது தெரியவந்துள்ளதாக ஈரான் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலம்ஹோசின் எஸ்மெய்லி தெரிவித்தார். இதையடுத்து, மஜித்தை அந்நாட்டு அரசு தூக்கிலிட உள்ளதாக தெரிவித்துள்ளது.