இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் பயணப்பட்ட, ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஜனவரி 09ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஆறு குழந்தைகள் உள்பட 56 பயணிகள் பயணம்செய்தனர். அத்துடன் ஆறு பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பிலிருந்து விலகியது. இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டிகளைத் தேடும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பெட்டிகளைக் கண்டறியும்பட்சத்தில், இறுதி நேரத்தில் ரெக்கார்டு செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கும்.
இதன்மூலம் விபத்திற்கான உரிய காரணம் தெளிவாகத் தெரியவரும் என அலுவலர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: 'இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை' - இம்ரான் கான்