சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது அந்நாடு மட்டுமின்றி கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் மிக வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில், சீனாவிலிருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்திற்கு வந்த தனியார் சொகுசு கப்பல், கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பயணிகள், ஊழியர்கள் என 3700க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
ஜப்பான் அரசு தற்போது அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கிவருகிறது. இந்நிலையில், சொகுசு கப்பலில் உள்ள 355 பேருக்கு தற்போது கோவிட்-19 தொற்று இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஒரே நாளில் 70 பேர் புதிதாக கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது.
கப்பலில் உள்ள 1,219 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 355 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாகவும் மற்ற பயணிகள் 14 நாள்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இப்படி ப்ரபோஸ் பண்ணா யாரும் நோ சொல்ல மாட்டாங்க..! - ராணுவ வீரரின் "ஐ லவ் யூ"!