பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரின் யுஹானாபாத் பகுதியில் சிறுமி தான் பணிபுரியும் தொழிற்சாலை வாகனத்திற்காக காத்துக்கொண்டிருந்தார் அப்போது சிலர் அவரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில், குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருப்பதால் இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவ பெண்கள் இலக்காக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஷபிக், "எங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு இது ஏன் நடக்கிறது? அவர்கள் வேலைக்கு வெளியே செல்லும் போதெல்லாம், இஸ்லாமிய ஆண்கள் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று அவர்களை வன்கொடுமை செய்கிறார்கள்.
நேற்று (ஜூன் 9) காலை 7.30 மணிக்கு, சிறுமி தொழிற்சாலை வாகனத்திற்காகக் காத்திருந்தபோது, இஸ்லாமிய ஆண்கள் துப்பாக்கி முனையில் அவளைக் கடத்திச் சென்றனர். மேலும், அவர்கள் அங்கிருந்த மற்ற சிறுமிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.
பிரதமர் இம்ரான் கான், இந்தப் பகுதியைச் சேர்ந்த பிற அரசியல்வாதிகள் எங்கள் குறைகளைக் கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, 2-3 நாள்களில் அதைத் தீர்ப்போம் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்தனர். இருந்தபோதிலும் அதில் எவ்வித முன்னேற்றம் இல்லை.
பாகிஸ்தான் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவ, இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அவர்களை இஸ்லாமியர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
காவல் துறையினர், அரசியல்வாதிகளும்கூட அவர்களின் குறைகளைப் புறக்கணித்து சிறுபான்மையினரைப் பரிதாபகரமான வாழ்க்கை வாழ விட்டுவிட்டனர்" என்றார்.