ETV Bharat / international

சீனாவில் 90 லட்சம் பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி

author img

By

Published : Jan 9, 2021, 5:46 PM IST

சீனாவில் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சீன அரசு அறிவிப்பு
சீன அரசு அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் செங் ஈஜிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீனாவின் கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக பேசிய அவர், "முதல் கட்டமாக கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்பு அனைத்து பொது மக்களுக்கும் செலுத்தப்படும். தடுப்பூசி உற்பத்திக்கு ஏற்ப அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. பிப்ரவரி மாதம் சீனப் புத்தாண்டின் போது, மக்கள் தங்களது வீட்டிலிருந்தே புத்தாண்டினைக் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வூஹான் நகரில் கரோனா தொற்றுப் பரவத்தொடங்கியது தொடர்பான உலக சுகாதார அமைப்புக் குழுவினரின் ஆய்வுப் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம், கரோனா தொற்று எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த புது தகவல் கண்டுபிடிக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம். ஆய்வு குழுவுக்கான அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்குவோம்" என்றார்.

கடந்த வாரம் மட்டும் பெய்ஜிங் நகரில் 300க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நகரைச் சேர்ந்த மக்கள் ஏழு நாட்களுக்கு தங்களைத் தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அந்நகர நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பதவியேற்பு விழாவுக்கு ட்ரம்ப் வராதது நல்லது - ஜோ பைடன் பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.