ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது.
இருதரப்புக்குமிடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தாலும், அவ்வப்போது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக்கொள்கின்றனர்.
குறிப்பாகப் பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
பர்யப் மாகாணம் தவ்லத் அபாத் மாவட்டத்தில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூன்று அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தலிபான் அமைப்பினர் என மாகாண காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கோஸ்ட் மாகாணம் யாக்பி மாவட்டத்தில் ராணுவ வாகனத்தை நோக்கி நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் நான்கு அப்பாவி மக்கள் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.