ஆப்கான் ராணுவத் தாக்குதலில் 254 தலிபான்கள் கொலை - காபுல் செய்திகள்
ஆப்கானிஸ்தானின் பல்வேறு பிராந்தியங்களில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 254 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் அங்கு தலிபான் அமைப்பு மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. 193 மாவட்டங்களுடன் சேர்த்து பல்வேறு ஊரகப் பகுதிகளை தலிபான் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விவரத்தை ஆப்கான் பாதுகாப்பு படை செய்திப் பிரிவு வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 254 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 97 பேர் காயத்துடன் பிடிபட்டுள்ளதாகவும் ஆப்கான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 14க்குப் பின்னர், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். 1,600 தலிபான்கள் உயிருடன் பிடிபட்டுள்ளனர். தலிபான் நடத்திய தாக்குதலில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடர் பிங்க நிறத்தில் அர்ஜென்டினா ஏரி - ரசாயன கழிவு காரணமா?