இது தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறி்க்கையில், அல் கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானிலுள்ள பர்மல் பகுதியில் தனது இருப்பை அதிகரிக்க முயற்சிக்கிறது. அதே போல பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் லக்ஷர் - ஈ - தொய்பாவின் இருப்பு அதிகரித்துள்ளது.
அல் கொய்தாவும், தாலிபான்களும் கூட்டு வைத்து செயல்பட வேண்டும் என்பது ஹம்ச உஸ்மா முகமது பின் லேடனின் விருப்பம். அதற்கேற்ப ஆப்கானிஸ்தானில் தாலிபானின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடங்களில் அல் கொய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.
சுமார் 240 அல் கொய்தா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் உட்பட 20 தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது என கூறப்பட்டுள்ளது.