சீனாவிலிருந்து ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகம் வந்துள்ள பயணிகள் சொகுசுக் கப்பலை, கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் சிறைபிடித்து வைத்துள்ளது. இதனால் கப்பலில் உள்ள பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
3,700 பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் 162 இந்தியர்கள் உள்ளனர். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் அடக்கம். கப்பலில் இருந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், 174 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் இருவருக்கு கொரோனா பாதித்திருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி வரை இந்த சொகுசு கப்பல் யோகஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் நடத்திய கொடூரத் தாக்குதல்! - சிறப்புக் கட்டுரை