கோவிட்-19 பெருந்தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்காக உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கான அவசரக்கால உதவி நடவடிக்கைகளுக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது.
அதன்படி 1.9 பில்லியன் டாலர் 25 நாடுகளுக்கு அளிக்கிறது. உலகளவில் உலக வங்கி 1.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
உலக வங்கி பரந்த பொருளாதாரத் திட்டம் மீட்புக்கான நேரத்தைக் குறைப்பதும், வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்குவதும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதும், ஏழைகளையும் பாதிக்கப்படக் கூடியவர்களையும் பாதுகாக்க உதவும் திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
கொள்கை அடிப்படையிலான நிதியுதவிக்கு முக்கியத்துவம் அளித்து, ஏழ்மையான வீடுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளில் உலக வங்கி ஈடுபட்டுவருகிறது.
கோவிட்-19இன் பரவலைக் குறைக்க உலக வங்கி குழு பரந்த, விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் உலக வங்கி இந்தியாவுக்கு ஆரம்ப திட்டங்களில், ஒரு 1 பில்லியன் டாலர் அவசர நிதியுதவி வழங்கும்.