’ஒரு நாள் ஒரு அதிசயம் போல அது மறைந்து போகப் போகிறது, அது மறைந்துவிடும்’. இவை கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய பொன்னான வார்த்தைகள்.
ட்ரம்ப்பின் திட்டம்
கரோனாவைக் காரணம் காட்டி காய் நகர்த்திய ட்ரம்ப், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை அதிபர் தேர்தலை தாமதப்படுத்த வேண்டுமெனக் கூறி ஒரு வக்கிரமான திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தார். முன்கூட்டிய தேர்தல், வாக்களிப்பில் யுனிவர்சல் மெயில் அறிமுகப்படுத்தப்படுவது போன்றவை தனது வாக்குகளை திருடுவதற்கான சதி என்றும் அவர் கடுமையான பரப்புரை செய்தார்.
ஏமார்ந்த ட்ரம்ப்
கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாறு காணாத வகையில் அதிக வாக்குகள் பதிவாகின. ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவான மனநிலையை முக்கியமான மாநிலங்களில் வாக்காளர்களிடையே ஏற்படுத்த அதிகமான வார்த்தைகளை விரயம் செய்து ட்ரம்ப் பரப்புரை செய்தார்.
தன் கையை விட்டு அதிகாரம் நழுவாமல் இருக்க அவர் பல முயற்சிகளைக் தந்திரமாகக் கையாண்டார். அதிபர் தேர்தலில் வென்ற பைடனின் வெற்றியை அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளால் இறுதி செய்யும்போது, ட்ரம்ப் தனது தோல்விக்கு தானே வியூகம் வகுத்துக் கொண்டார். துணை அதிபர் மைக் பென்ஸ் நடத்தும் தேர்தல் செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட ட்ரம்ப், வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பலைத் தூண்டினார்.
வன்முறையின் பிம்பமான ட்ரம்ப்
பறிபோன அதிகாரத்தைத் தக்க வைக்கும் நோக்குடன் ட்ரம்ப், தனது ஆதரவாளர்களை ஜனநாயகக் கோயில் எனப் பல்வேறு விதமாக விவரிக்கப்பட்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்த தூண்டினார். வெள்ளை மாளிகை மீது படையெடுத்துச் சென்ற ட்ரம்ப் ஆதரவாளர்கள் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவையின் மரியாதைக்குரிய உறுப்பினர்கள், இந்த வன்முறைக்கு நடுவில் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக இங்கும் அங்கும் ஓடினர். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடையே பற்றவைத்த வெறுப்பு, வன்முறையின் வடிவமாக கொளுந்துவிட்டு எரிந்தது. அதைத்தான் இத்தாக்குதல் விவரிக்கிறது. இது அமெரிக்காவின் அடிப்படை ஜனநாயக மதிப்புகளுக்கு எதிராக ட்ரம்ப் ஆரம்பித்த பயங்கரவாத தாக்குதல்.
இனவெறிப் போக்கினால் உந்தப்பட்ட அவர், அதை ஆதரிக்கும் வலதுசாரி கும்பல்களைத் தூண்டினார், இதன் மூலமாக வெளிஉலகிற்கு தனது சர்வாதிகார வலிமையை நிரூபிக்க முயன்றார். வெள்ளை மாளிகையை மிருகத்தனமான சக்தியுடன் கைப்பற்றும் முயற்சியால், உலகின் பழமையான ஜனநாயகத்தை நகைப்பிற்குரியதாக ட்ரம்ப் மாற்றினார்.
வெள்ளை மாளிகை முற்றுகையின் பின்னணி
தேர்தலின் இறுதி முடிவுகளை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக்கொண்டு, வெள்ளை மாளிகை முற்றுகைக்கு அவருடன் ஒத்துழைக்க மறுத்த பின்னரே ட்ரம்ப் இறங்கி வந்து, அதிகாரத்தை மாற்ற ஒப்புக்கொண்டார். அந்த கணமே அதிபர் பதவியில் நீடிக்கும் உரிமையை ட்ரம்ப் இழந்துவிட்டார்.
அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால், ஜனநாயகம் பயனற்றதாக மாறும், குழப்பம் நிலவும் என்று ஜார்ஜ் வாஷிங்டன் 225 ஆண்டுகளுக்கு முன்பு எச்சரித்திருந்தார். சுயநலத் தலைவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக நிலைமையைப் பயன்படுத்த முன்வருவார்கள் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் மாபெரும் சக்தியாக அமெரிக்க அரசியலமைப்பு இருந்தபோதிலும், சமூக ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து வருவதால் அமெரிக்காவில் அதிருப்தி வளர்ந்து வருகிறது. இருமுறை அதிபராக இருந்த கறுப்பினத் தலைவரான பராக் ஒபாமாவை தொடர்ந்து, மக்களின் இன உணர்வுகளை சாதகமாக்க வெறுப்பின் நஞ்சை தூண்டியதன் மூலம் டிரம்ப் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் ட்ரம்ப்பின் பரப்புரை ஜார்ஜ் வாஷிங்டனின் தீர்க்கதரிசன வார்த்தைகளை நிரூபித்தது.
ட்ரம்ப்பின் உடனடி பணி நீக்கம்
உலகளாவிய பத்து அபாயங்களில் ட்ரம்ப் வென்ற தேர்தலும் ஒன்றாகும் என மக்கள் கருதியதாக எகனாமிஸ்ட் நடத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவு சரி என்று ட்ரம்ப் அடுத்தடுத்து நான்கு முறை நிரூபித்தார்.
“அமெரிக்கா முதலில்” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த பின்னர், ட்ரம்ப் அனைத்து அமைப்புகளையும் பாழாக்கியதுடன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிகப்படியான பாரபட்சமானச் செயல்களைச் செய்தார். அவரது முந்தைய செயல்களை விட வெள்ளைமாளிகை தாக்குதல் தலையாயதாக உள்ளது.
வரும் 2024 தேர்தலுக்கு ட்ரம்ப் தன்னை தயார்படுத்தி வருகிறார். உண்மையான போர் இப்போதே தொடங்கிவிட்டது என அவர் சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் நலன்களுக்காக, ட்ரம்பை உடனடியாக பதவியில் இருந்து நீக்குவது மட்டுமல்லாமல், எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவதையும் தடை செய்ய வேண்டும்.
அதிபர் பதவியைப் கைப்பற்றியதை தவிர, ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையாக உள்ளனர். அமெரிக்க சமுதாயத்தில் வேரூன்றியுள்ள இனவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பதே அவர்கள் செய்ய வேண்டிய உடனடி பணி.
இதையும் படிங்க:பதவியேற்பு விழாவுக்கு ட்ரம்ப் வராதது நல்லது - ஜோ பைடன் பதிலடி