கரோனா வைரஸ் தாக்கம் பெரு நாட்டில் அதிகளவில் உள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிந்தோரின் எண்ணிக்கையும் 572 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் வைரஸ் அச்சத்தால் வீட்டிலேயே முடங்கிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பூங்காவிற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்துள்ளது. இதனால், பெரு நாட்டில் உள்ள அனைத்து வன உயிரியல் பூங்காக்களிலும், விலங்குகள் கூடாரத்திலுள்ள 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட விலங்குகளின் உணவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விலங்குகள் கூடாரத்தின் மேலாளர் கூறுகையில், "சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் தான் அதிகளவில் உள்ளன. இவைகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு மட்டுமே உணவு வழங்க முடியும். அதற்கு பின்னர், வெளியில் கடன் வாங்கித்தான் விலங்குகளுக்கு சாப்பாடு அளிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது" என்றார்.
இதுதொடர்பாக, பூங்காவின் காப்பாளர்கள் அரசு அலுவலர்களிடம் விலங்குகளின் உணவிற்கு உதவுமாறு கடிதங்கள் எழுதியுள்ளனர். ஆனால், இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 400 பேருக்கு கரோனா தொற்று உறுதி