ETV Bharat / international

'டோனி மாரிசன்'... என்றும் சகாப்தமே!

1993ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற டோனி மாரிசன் நியூயார்க் நகரில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையன்று காலமானார். அவரைப் பற்றி சிறப்புக் கட்டுரை

கறுப்பு சாகாப்தம்
author img

By

Published : Aug 8, 2019, 7:18 PM IST

நீல நிறக் கண்கள் (The bluest eye), சூலா (Sula), சாலமனின் பாடல் (Song of Solomon), தார் குழந்தை (Tar baby), அன்பிற்குரிய (Beloved), ஜாஸ் (Jazz), சொர்க்கம் (Paradise), அன்பு (Love) உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நாவல்களுக்கு சொந்தக்காரர் டோனி மாரிசன்.

டோனி மாரிசனின் சமகால எழுத்தாளர்கள் இனவெறிக்கெதிராக குரல் கொடுத்துக்கொண்டிருந்த வேளையில், கறுப்பின மக்களின் நுண்ணிய உணர்வுகளை மிக இயல்பாக தன் நாவல்களில் பிரதிபலித்தார்.

ஒரு படைப்பாளி தனது படைப்பின் மூலம் வெகுஜனத்தை தன்னுடன் மிக நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்போதுதான் காலங்கள் தாண்டியும் வாழ்வான். ஆம், டோனி மாரிசன் கறுப்பின மக்களை தனது கதைக்களத்தோடு தங்களைப் பொருத்திப் பார்க்கச் செய்தார். அந்தளவுக்கு அவரின் படைப்பு அநாயசமானது!

கறுப்பு சாகாப்தம் டோனி மாரிசன்
கறுப்பு சகாப்தம் டோனி மாரிசன்

’நீலநிறக் கண்கள்’ நாவலின் நாயகி 11 வயது ஆப்பிரிக்க சிறுமி. அவள் வெள்ளை இன சிறுமிகளைப் போல நீலநிறக் கண்கள் வேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கிறாள். இதுபோலத்தான் டோனி மாரிசனின் ஒவ்வொரு கதைக்களமும் சாமானிய கறுப்பினத்தவரின் மன ஓட்டத்தை தெளிந்த நீரோடை போல பிரதிபலிக்கும்.

ஒவ்வொரு படைப்பிலும் கறுப்பினத்தவரின் உணர்வுகள், மன ஓட்டம், நிலையில்லா அவர்களது அன்றாட வாழ்க்கை, ஏக்கங்கள் உள்ளிட்டவற்றை மிக இயல்பாக உணர்வுக்குவியல்களாகத் தனது வாசகர்களுக்கு வழங்கினார்.

நியூயார்க் இதழ் 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வெளியான சிறந்த நாவல் எது எனக் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் டோனி மாரிசனின் ‘அன்புற்குரிய (Beloved)’ நாவல் முதல் இடம் பெற்றது.

’அன்புற்குரிய (Beloved)' நாவல் சேதே என்ற கறுப்பின அடிமைப் பெண்ணின் வாழ்க்கையை கதைக் களமாகக் கொண்டிருக்கும். சேதே அவளது இரண்டு வயது மகள் தன்னைப்போல அடிமை வாழ்க்கை வாழக் கூடாது என சுயபச்சாதாபத்தால் கொன்றுவிடுகிறாள். இதனையடுத்து நிகழும் காட்சிகளும் சம்பவங்களும் கறுப்பினத்தவரின் வாழ்க்கை எவ்வளவு வலி நிறைந்தது என்பதை மிக அழகாக விவரிக்கும்.

இப்படி ஒவ்வொரு நாவலிலும் படைப்பிலும் டோனி மாரிசன் விட்டுச்சென்றது கறுப்பினத்தவரின் ஒட்டுமொத்த வாழ்வியலையும்தான். கறுப்பினத்தவரின் பல வருட வாழ்வியலை கண்முன் வைத்துவிட்டு கண் மூடிவிட்டார் டோனி மாரிசன்.

கறுப்பின வரலாறையும், அடிமை வாழ்வியலையும் தேடிச் செல்லும் ஒவ்வொருவருக்கும் உங்களது படைப்பு வெளிச்சமாக இருக்கும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.