அமெரிக்காவில் விமான தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் போயிங் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து, போயிங் நிறுவனம் தங்களது தயாரிப்புகளில் தனிக்கவனம் செலுத்திவருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான இருபத்தி மூன்று 787 எஸ் ரக விமானங்களின் உதிரிபாகங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாற்றியமைக்க வேண்டும் என அமெரிக்க அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இயக்கப்பட்டுவரும் 787 எஸ் ரக விமானங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், பாதுகாப்பு அம்சங்களில் தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், விமான பாகங்கள் விரைவாக அனுப்பப்படும் பட்சத்தில் அவைகள் உடனடியாக பயன்படுத்தப்படும் எனவும், அதற்காக ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.