ETV Bharat / international

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு 5.9 மில்லியன் டாலர்கள் சுகாதார நிதி

வாஷிங்டன்: இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு 5.9 மில்லியன் டாலர்களை அமெரிக்கா அளித்துள்ளது.

US
US
author img

By

Published : Apr 17, 2020, 2:27 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவுக்கு உதவும் வகையில் 2.8 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்கட்டமாக இந்தியாவுக்கு தற்போது 5.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 45 கோடி) வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த நிதி பயன்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இது முன்னதாக அறிவிக்கப்பட்ட 2.8 பில்லியன் டாலர்கள் உதவித்தொகையின் ஒரு பகுதி. இதில் கடந்த 20 ஆண்டுகளாகச் சுகாதாரத் துறையை மேம்படுத்த அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்துவரும் 1.4 பில்லியன் டாலர்களும் அடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசும், அமெரிக்க பன்னாட்டு வளர்ச்சி முகமையும் 508 மில்லியன் டாலர்கள் நிதியை மருத்துவம், பொருளாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளது. இதுமட்டுமின்றி அமெரிக்கா ஏற்கனவே பல நட்பு நாடுகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் (என்ஜிஓ) நிதியுதவி அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

கோவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை ஆப்கானிஸ்தான் (18 மில்லியன் டாலர்), வங்கதேசம் (9.6 மில்லியன் டாலர்கள்), பூட்டான் (5,00,000 டாலர்கள்), நேபாளம் (1.8 மில்லியன் டாலர்கள்), பாகிஸ்தான் (9.4 மில்லியன் டாலர்கள்), இலங்கை (1.3 மில்லியன்) ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.
இதையும் படிங்க: 'ரேபிட் சோதனைக் கருவிகள் வைரஸ் தொற்றைக் கண்டறிய பயன்படாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.