ஆப்கானிஸ்தானில் உள்ள காபுலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 80 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய ட்ரம்ப், "7,000 மைல்கள் தள்ளியுள்ள அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறது. ஆனால், அருகில் உள்ள இந்தியா போராடியதில்லை. பாகிஸ்தான் சிறிதளவு போராடியுள்ளது. வரும் காலங்களில் ரஷ்யா, ஈரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்" என்றார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.