அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு ஏழுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில், "அடுத்த வாரம் மும்பையில் முதன்முறையாக நடைபெறவுள்ள எம்பிஏ கூடைப்பந்து ஆட்டத்தை பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கண்டு களிக்கவுள்ளனர். நான் அதில் பங்குபெறலாம்" என்றார்.
முன்னதாக, இருநாட்டிற்கும் இடையேயான முதலீட்டையும் ஆற்றல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் பேசிய ட்ரம்ப், "இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி மக்களின் பாதுகாப்போம்" எனத் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு அரங்கில் கூடியிருந்த மக்கள் கைத்தட்டி வரவேற்றனர்.
ஹவுடி மோடி!' வரலாற்றுச் சிறப்புமிக்கது
'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு அமெரிக்கா மண்ணில் இவ்வளவு கூட்டம் கூடுவது இதுவே முதல்முறையாகும். எனவே, இது வரலாற்று சிறப்பிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஹவுடி மோடி: மாறி மாறி புகழ்ந்துகொண்ட மோடி, ட்ரம்ப்