அதிகாரத்தில் அதிக பேராசை கொண்ட ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்கள் டொனால்ட் டிரம்பைத் தாண்டி ஒருவரைப் பார்க்க வேண்டியதில்லை. ஒருபுறம், அவர் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார், மறுபுறம், இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறார்.
இந்த இலக்குகளை அடைவதற்காக, அவர் உலக நாடுகளை நரகப் பாதையில் நிறுத்துகிறார். இதன் விளைவாக, மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் வெனிசுலா போன்ற முக்கியமான புவியியல் களங்களில் அமைதிக்குக் குந்தகம் விளைந்துள்ளது. ஒன்பது மாத காலப்பகுதியில் தேர்தல்கள் நெருங்கி வருவதால், ட்ரம்ப் தனது நலன்களைப் பாதுகாப்பதில் தீவிரம் கொண்டுள்ளார், மேலும் அவரது நம்பகமான பணியாளர்களை அவர்களின் தலைவிதிக்கு விட்டுவிடுகிறார்.
டிரம்பிற்குள் உள்ள தொழிலதிபர் லாப நஷ்டங்களை கணக்கிட்டு வருகிறார். இத்தகைய அணுகுமுறையின் சமீபத்திய எடுத்துக்காட்டு அமெரிக்க-தலிபான் சமாதான ஒப்பந்தம். கத்தார் தோஹாவில் அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜல்மே கலீல்ஃசாத் மற்றும் தலிபான் தளபதி முல்லா பரதர் இடையே. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான், சீனா, துருக்கி மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அடுத்த 14 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது இராணுவ துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. மேலும், இந்த ஒப்பந்தம் ஆப்கானிய அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தால், 2014 டிசம்பரில் தொடங்கப்பட்ட "ஆபரேஷன் ரெசல்யூட் சப்போர்ட்" (உறுதியான துணைநிற்பு நடவடிக்கை) டிலிருந்து அமெரிக்கா வெளியேற முடியும். உண்மையில் இது (ஆபரேஷன் என்ட்யூரிங்க் ஃப்ரீடம்). நீடித்த சுதந்திரத்திற்கான நடவடிக்கை 2001இல் தொடங்கப்பட்டு 2014 இல் முடிவுக்கு வந்தது, ஆனால் தலிபானுடனான மோதல் தொடர்ந்தது.
2014 முதல், அமெரிக்க இராணுவத்திற்கு பதிலாக, ஆப்கானிய இராணுவம் தலிபான்களுடன் போராடி வருகிறது. அதற்கான ஆதரவை அமெரிக்கா அளித்து வருகிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாதகமான முடிவுக்கு வந்தால், 18 ஆண்டுகால இரத்தக்களரி யுத்தம் முடிவுக்கு வரும். இந்த ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எச்சரிக்கை யோடு பதிலளித்தார்.
ஆப்கானிஸ்தான் நிலத்திலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் அகற்றப்பட்டால் மட்டுமே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். தற்போதைய விவகார நிலவரப்படி , பாம்பியோவின் கனவு ஒரு கானல் நீர் போல் தோன்றுகிறது. மறுபுறம், தலிபானின் அரசியல் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஃஸாய் இது உண்மையில் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார். இந்த சமாதான ஒப்பந்தத்தை தலிபான்கள் தங்களின மூலோபாய ஒப்பந்தம் என்றே அழைப்பதாக தி கார்டியன் போன்ற பத்திரிகைகள் குறிப்பிட்டன.
இந்த சமாதான உடன்படிக்கையின் ஒவ்வொரு வார்த்தையும் கூடிய விரைவில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முனையும் அமெரிக்காவின் ஆதங்கத்தையே வெளிப்படுத்துகிறது. அடுத்த 14 மாதங்களில் மொத்தமாக துருப்புக்கள் திரும்பப் பெறுவதன் ஒரு பகுதியாக, முதல் 135 நாட்களில் ஐந்து தளங்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். மேலும் 8,600 அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி துருப்புக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தில் ஐ.நா மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ரத்து செய்வதும் அடங்கும். ஒப்பந்தத்தின் முதல் பகுதியில், அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் துல்லியமான தேதிகள் மற்றும் கால அவகாசம் அமைக்கப்பட்டன.
இரண்டாவது பகுதி தலிபான்கள் செய்ய வேண்டியவை பற்றிய எந்த அளவீடுகளையும் காட்டவில்லை. இந்த ஒப்பந்தம் தலிபான்களை அல்-கொய்தா போன்ற பிற கிளர்ச்சிக் குழுக்களிடமிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துகிறது. அல்-கொய்தாவை ஆதரிப்பதற்காக தாலிபான்கள் தங்கள் ராஜ்யத்தைக் கைவிட்டனர். ட்ரம்பின் பொருட்டு அவர்கள் ஏன் அதையெல்லாம் விட்டுவிடப் போகிறார்கள்? இரண்டாம் பாகத்தின் ஐந்தாவது ஷரத்தில் ஆபத்தின் அறிகுறி உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக விசா, பாஸ்போர்ட் அல்லது பயண அனுமதி வழங்கத் தலிபான்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அமெரிக்கா மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதே இதன் பொருளாகும். தலிபான்கள் தங்களை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய கூட்டமைப்பு என்று அறிவித்ததை அமெரிக்கா தனது அனைத்து வலிமையுடனும் எதிர்க்க வேண்டியிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள உட்பிரிவுகள் தலிபான்களால் பின்பற்றப்படா விட்டால் அது மீண்டும் ஆப்கானிஸ்தானிற்குத் திரும்பும் என்று அமெரிக்கா கூறி இதற்காக பதினான்கு மாத காலக்கெடுவும் அளித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் நிறைவடைந்தால், தலைமை தங்கள் அரசியல் அழுத்தத்திலிருந்து விடுபடும், மேலும் மனமாற்றமும் ஏற்படக்கூடும். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்த ஒப்பந்தம் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போதைய அரசியல் நிச்சயமற்ற தன்மை சமாதான ஒப்பந்தத்திற்கு ஒரு தடையாக அமையக்கூடும்.
தேர்தல் ஆணையம் 50.64 சதவீத வாக்குகளைப் பெற்று அஷ்ரப் கானியை வெற்றியாளராக அறிவித்த போதிலும், 39.52 சதவீத வாக்குகளைப் பெற்ற அவரது எதிராளி அப்துல்லா, இந்த முடிவை ஏற்கவில்லை. முந்தைய தேர்தல்களில் இதேபோன்ற பிரச்சினை எழுந்தபோது அமெரிக்கா ஜனாதிபதி கானியிடம் அப்துல்லாவை தலைமை நிர்வாகியாக ஏற்கும்படி வற்புறுத்தி நியமித்தது.
ஆனால், இம்முறை, தலிபான்களுடன் ஒப்பந்தம் செய்வதில் அமெரிக்கா மும்முரமாக உள்ளது. தலிபானுடனான பேச்சுவார்த்தை முடிவடையாத வரை தமது அரசியல் போட்டியை ஒதுக்கி வைக்குமாறு ரஷ்யா போன்ற நாடுகள் இந்த தலைவர்களை வலியுறுத்துகின்றன. கானி ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக தொடர்கிறார், ஆனால் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசியல் ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் பிரச்சினை மீண்டும் எழக்கூடும்.
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானில் முதலீடுகளுடன் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பணவைப்புகளும் பாதிக்கப்படுகின்றன. கூடுதலாக, பாதுகாப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியா எப்போதுமே ஆப்கானிய அரசாங்கத்தின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து தலிபான்களிடமிருந்து இடைவெளியைப் பராமரித்துவருகிறது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் மாஸ்கோவில் நடைபெற்ற தலிபான் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்தியா தனது முன்னாள் தூதர்களான அமர் சின்ஹா மற்றும் டி.சி.ஏ ராகவன் ஆகியோரை அனுப்பியுள்ளது. உண்மையில், இந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் ஆப்கானிஸ்தானில் அமைதியை மீட்டெடுக்கும் செயல்முறை வேகம் பெற்றது. இந்த ஒப்பந்த விழாவில் இந்திய தூதர் பி குமரன் வெறும் பார்வையாளர் தரத்தில் கலந்து கொண்டார்.
மறுபுறம், பாகிஸ்தான் தலிபான் மற்றும் அமெரிக்காவுடனான தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது. பலூச் விடுதலை இராணுவத்தை அமெரிக்கா ஏற்கனவே தடை செய்திருந்தது. 2019 டிசம்பரில், டிரம்ப் அரசாங்கம் அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளித்தது. இவை அனைத்தும் இந்தியாவுக்கு மூலோபாய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தோஹாவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அங்கு ஏற்கனவே சாதித்ததை இழந்து விடாமல் இருக்க அமெரிக்கா கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
2018இல் தொடங்கப்பட்ட TAPI (துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா) எரிவாயு குழாய் திட்டத்தில் மேலும் தாக்கங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. துர்க்மெனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை வழங்கும் இந்த திட்டம், பணப் பட்டுவாடா மற்றும் பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த திட்டத்திலிருந்து, ஆப்கானிஸ்தானுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் விநியோகக் கட்டணம் கிடைக்கக்கூடும்.
எரிவாயுக் குழாய் பாதை தலிபான் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளான ஹார்த் மற்றும் காந்தஹார் போன்ற இடங்களின் வழியாக இயங்குகிறது. பாகிஸ்தான் தலிபான்களைத் தூண்டிவிட்டு இந்தியாவைச் சிக்கலில் விழவைக்கக் கூடும். இந்த திட்டத்திலிருந்து வரும் நிதியை தலிபான்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பது குறித்துப் பரவலான கவலை உள்ளது. தவிர, ஆப்கானிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லையை வந்து அடையும் ஐ.எஸ்.ஐ- ஆல் தூண்டப்பட்ட புல்லுருவிகளின் அச்சுறுத்தல் உள்ளது. அமெரிக்காவின் கண்காணிப்பு இருந்தபோதிலும், உலகின் 90 சதவிகித அபின் ஆப்கானிஸ்தானில் வளர்க்கப்படுகிறது.
இந்த வருமானத்தின் சுவை கண்டவர்கள் வெறும் சமாதான ஒப்பந்தத்திற்காக அபின் சாகுபடியை கைவிடுவார்களா என்பது சந்தேகமே. அதிகரித்து வரும் இந்த போதைப் பொருள் பயங்கவாதம் காஷ்மீர் மற்றும் பஞ்சாபிற்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமே போதைப்பொருள் கடத்தல்தான். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் இந்தியாவின் இணக்கத்தில் பாகிஸ்தான் தூண்டப்பட்ட தலிபான் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை. பாராளுமன்றக் கட்டிடங்கள், பள்ளிகள், அணைகள் மற்றும் சாலைகள் போன்ற 36 க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்களை இந்தியா முடித்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.
இதனால்தான் இந்திய தூதரகங்கள் மற்றும் திட்டங்கள் மீது தலிபான்கள் பல தாக்குதல்களை நடத்தினர். இந்த முக்கிய திட்டங்களில் பணிபுரியும் பல இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க துருப்புக்கள் பின்வாங்கும் வரை தலிபான்கள் அமைதியாக இருக்கக்கூடும் என்றாலும், அமெரிக்கா காட்சிக்கு வெளியே வந்தவுடன் அவர்கள் இந்தியாவை குறிவைப்பார்கள்.
இப்போதைக்கு, தலிபான் உடன்படிக்கையை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளில் மனித உரிமைகள், பெண்களின் கவுரவம், நல்லாட்சி அல்லது ஜனநாயகம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சுருக்கமாக, சிரியாவில் நிகழ்த்தியது போலவே , டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை முற்றிலுமாக சாக்கடையில் தள்ளிவிட்டுத் தனது வழியில் செல்கிறார்.
ஆஃப்கானில் ஆளும் அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் உறுதியற்ற தன்மையுடன், அமெரிக்கா தலிபான்களுடன் கைகோர்த்துக் கொண்டதால் நெருக்கடிக்கான மேகமூட்டங்கள் வலம்வரத் தயாராகின்றன. 18 மாத பேச்சுவார்த்தைகள் மற்றும் வியத்தகு முன்னேற்றங்களுக்குப் பிறகு, அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடுகளோ குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்கவில்லை. மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்னர், ஆப்கானிய அரசாங்கம் 5,000 தலிபான் போராளிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், அதேபோல் 1,000 குடிமக்கள் தலிபான் சிறைப்பிடிப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். விடுவிக்கப்பட்ட கைதிகள் ஒப்பந்த அம்சங்களைச் செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
ஆப்கானிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், மீதமுள்ள தலிபான் கைதிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும். இது ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாகும். வித்தியாசமாக, இந்த தலிபான் போராளிகள் அனைவரும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், ஆனால் இந்த விவாதங்களின் போது ஆஃப்கான் எங்கும் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையே மட்டும் நடைபெற்ற விவாதங்கள் இவை. இது இந்த கைதிகளின் விடுதலை குறித்த கேள்விகளுக்கு வழிவகுக்கிறது. ஜனாதிபதி அஷ்ரப் கானி அண்மையில் நடந்த கூட்டத்தில் ஆப்கானிய அரசாங்க தலைவர்களுடன் உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாவிட்டால் எந்த கைதிகளும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்சால் சீனாவுக்கு கிடைத்த ஒரே நன்மை!