ETV Bharat / international

தனிமைப்படுத்தப்படுகிறதா நியூயார்க்? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசனை - நியூயார்க்கில் இதுவரை 52 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று

நியூயார்க்: கரோனா வைரஸ் தொற்று நியூயார்க்கில் வேகமாகப் பரவுவதையடுத்து, அந்த மாகாணத்தை தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

trump-considering-quarantine-on-new-york

author img

By

Published : Mar 29, 2020, 2:33 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக நியூயார்க்கில் இதுவரை 52 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய பகுதிகளைத் தனிமைப்படுத்த ஆலோசனை நடத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில், ''நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய பகுதிகளைத் தனிமைப்படுத்த ஆலோசித்துவருகிறேன். விரைவில் அந்த முடிவு வெளியாகும்.

தனிமைப்படுத்தும் முடிவினை நாம் இப்போது எடுக்கவில்லை என்றால், பின்னாள்களில் நிச்சயம் அந்த முடிவிற்குத் தள்ளப்படுவோம். குறைந்தது இரண்டு வாரங்களுக்காகவாவது நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய பகுதிகளைத் தனிமைப்படுத்த வேண்டும்'' என்றார்.

இதனைப்பற்றி நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ பேசுகையில், ''தனிமைப்படுத்துதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அதனைச் சட்டப்பூர்வமாக எப்படிச் செயல்படுத்த முடியும் என்பதும் கேள்விக்குறியே. இதுவரை அதிபர் ட்ரம்புடன் தனிமைப்படுத்தும் முடிவினைப் பற்றி ஆலோசனை மேற்கொள்ளவில்லை'' என்றார்.

இதையும் படிங்க: கோவிட்-19: இத்தாலியில் உயிரிழப்பு பத்தாயிரத்தை தாண்டியது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.