ETV Bharat / international

'அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள்'... அமெரிக்க அதிபரால் ஸ்தம்பித்த டிக் டாக்;- - நீதிமன்றத்தை நாடும் டிக்டாக்

பெய்ஜிங்: டிக்டாக் நிறுவனம் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக்டாக்
டிக்டாக்
author img

By

Published : Aug 23, 2020, 10:47 PM IST

பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி தடை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பதிப்பை, வேறு நிறுவனத்திற்கு 45 நாள்களுக்குள் விற்பனை செய்ய வேண்டும்; இல்லையென்றால் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தின் பரிவர்த்தனைக்குத் தடை விதிக்கும் உத்தரவிலும் அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க அதிபரின் புதிய அறிவிப்பு டிக்டாக் நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதில், 'அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட் டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையாச் சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இவரின் திடீர் அறிவிப்புக்கு டிக்டாக் நிறுவனம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பைட் டான்ஸ் நிறுவனம் கூறுகையில், "டிக்டாக்கில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களும் 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஆயிரக்கணக்கான வங்கி பங்காளர்களும் அமெரிக்காவில் உள்ளனர். எங்கள் நிறுவனத்துடன் பங்கு வைத்திருக்கும் அனைவருக்கும் நிலைமையை எடுத்துரைத்து சரியான தீர்வை முடிவு செய்ய, அமெரிக்க அரசு நிர்ணயித்த கால அவகாசத்துக்குள் எட்டுவது சாத்தியம் இல்லாதது. அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாக'' டிக்டாக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

முதன்முதலாக டிக் டாக் செயலிக்கு இந்திய தடை விதித்திருந்தாலும், அமெரிக்காவின் நடவடிக்கை சீனாவுடன் டிஜிட்டல் போர் புரிவது போல் சென்றுகொண்டிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.