ETV Bharat / international

அமெரிக்க மருத்துவமனைகளில் ஊடுருவிய ரஷ்ய ஹேக்கர்ஸ் - எச்சரிக்கும் உளவுத்துறை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மருத்துவமனைகளுக்கு ரேன்சம்வேர் அனுப்பி ரஷ்ய ஹேக்கர்ஸ் தாக்குதல் நடத்தியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

havk
hack
author img

By

Published : Oct 30, 2020, 3:07 PM IST

அமெரிக்க சுகாதாரத் துறையின் தனிப்பட்ட தகவல்களைக் கண்டறிந்து சீர்குலைக்கும் நோக்கில் மருத்துவமனைகளில் ரஷ்ய ஹேக்கர்ஸ் சைபர் கிரைம் தாக்குதல் நடத்திவருவதாக அமெரிக்கா உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனமான மாண்டியண்டின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் சார்லஸ் கார்மகல் கூறுகையில், "கடந்த வாரத்தில் மட்டும் மூன்று மருத்துவமனைகளில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யுஎன்சி1878 ஹேக்கர்ஸ் குரூப் நடத்தியுள்ளதாக வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். அமெரிக்கா இதுவரை கண்டிராத மிக முக்கியமான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்தித்துவருகிறது" எனத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக எஃப்.பி.ஐ. மற்றும் சுகாதாரத் துறை இணைந்து எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர். இணையவழித் தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கும் சில நாள்களில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.