இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தவரின் மகள் சாரா கிதியோன் ஆவர். இவர் தற்போதைய குடியரசுக் கட்சியின் செனட்டர் சூசன் காலின்ஸுக்கு எதிராக நவம்பரில் போட்டியிட அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்கா முழுவதும் ஒபாமா ஒப்புதல் அளித்த வேட்பாளர்களின் பட்டியலில் சாரா இடம் பெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஒருவேளை நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டால், கமலா ஹாரிஸுக்குப் பிறகு அமெரிக்க செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய-அமெரிக்க பெண் ஆவார். கமலா போட்டியிட அப்போதைய பிடனின் துணை ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிருந்தார். இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிந்தனைமிக்க மற்றும் அதிக தகுதி வாய்ந்த ஜனநாயகக் கட்சியினரின் இந்த மாறுபட்ட நம்பிக்கையான தொகுப்பை அங்கீகரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த வேட்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து, உழைக்கும் மக்களுக்காகப் போராடுவது மட்டுமின்றி பாராபட்சம் இல்லாத வேளை வாய்ப்பை மக்களுக்காக உருவாக்க வேண்டும். மேலே இருப்பவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து அமெரிக்கர்களின் நலனுக்காக போராட வேண்டும்" எனத் தெரிவித்தார்.