ETV Bharat / international

குழந்தைகளை பாதிக்கும் கோவிட்-19 குறித்து விளக்கும் புதிய ஆய்வு! - Children’s Hospital at Montefiore

நியூயார்க் : குழந்தைகள் மீதான கரோனா வைரஸின் தாக்கம் குறித்து மான்டிஃபியோர் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி இணைந்து ஆய்வொன்றை நடத்தியுள்ளது.

New study from pandemic epicenter describes severe COVID-19 response in children
குழந்தைகளை பாதிக்கும் கோவிட்-19 குறித்து விளக்கும் புதிய ஆய்வு!
author img

By

Published : May 25, 2020, 12:02 PM IST

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் எனும் குழந்தைகளுக்கான மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில், குழந்தைகள் மீதான கரோனா வைரஸின் தாக்கம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

அதில், “மான்டிஃபியோர் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழந்தைகள் மயக்கவியல் வல்லுநர்கள், தொற்று நோய் வல்லுநர்கள், குழந்தை நோய் மருத்துவர்கள் இணைந்து குழந்தைகள் மீதான கரோனா வைரஸின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் குழந்தைகள் தொடர்பான முழுமையான தகவல்களை தொகுத்து வைத்து, சிகிச்சைகளை பரிந்துரைத்து வரும் மிகப்பெரிய மையமாக மான்டிஃபியோர் குழந்தைகள் மருத்துவமனை இயங்கி வருகிறது.

பிறந்து ஒரு மாதமான குழந்தையிலிருந்து 21 வயதிற்குட்பட்ட 46 பேரை மான்டிஃபியோர் குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ பராமரிப்பு பிரிவில் (பி.சி.சி.யு) வைத்து கண்காணித்து வந்துள்ளனர்.

பொது பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களுடன் ஒப்பிடும்போது தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு அதிக அளவு வீக்கம் இருப்பதாகவும், கூடுதல் சுவாச ஆதரவு தேவையும் கூடுதலாக தேவைப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பி.சி.சி.யுவில் பராமரிக்கப்படும் குழந்தைகளில், கிட்டத்தட்ட 80 விழுக்காடு பேர் கடும் சுவாசக் கோளாறு நோய்க்குறி (ஏ.ஆர்.டி.எஸ்.)கொண்டிருந்தனர் என்றும் இது மிகவும் வயது கொண்ட கோவிட்-19 நோயாளிகளுடன் பொதுவாக சமன் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. கடும் சுவாசக் கோளாறு நோய்க்குறி (ஏ.ஆர்.டி.எஸ்) உள்ள குழந்தைகளில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு பேர் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளனர். பெரியவர்களில், உடல் பருமன் மிகவும் கடுமையான நோய்க்கான ஆபத்து காரணி என்பதை நாங்கள் அறிவோம், இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொதுப் பிரிவில் உள்ளவர்களைக் காட்டிலும் அதிக உடல் பருமன் இல்லை என்பதை எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குழந்தை மயக்கவியல் மருந்து வல்லுநர் மருத்துவர் ஜெர்ரி ஒய். சாவ் கூறுகையில், “பெரியவர்களுக்கு கடும் நோய் ஏற்படுத்தும் ஆபத்தான காரணியாக உடல் பருமன் இருப்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொது அலகுகளில் உள்ளவர்களை விட உடல் பருமன் அதிகமாக இல்லை என்று எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது.

பாதிப்பிற்குள்ளாகி உள்ள 100 குழந்தைகளில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு இல்லை என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அறிகுறியற்ற நபர்களால் வைரஸ் பரவக்கூடும் என்ற உண்மையை இது பிரதிபலிக்கக்கூடும். மேலும், அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட சமூகங்களில் கோவிட்-19 பாதிப்பிற்கான சூழல் அதிகமாக இருக்கலாம்” என தெரிவித்தார்.

மேலும், ஆய்வு குறித்து ஐன்ஸ்டீன் கல்லூரியின் உதவி பேராசிரியரும், தீவிர இதய சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவருமான சிவானந்த் எஸ். மேதர் பேசுகையில், “அதிர்ஷ்டவசமாக கோவிட்-19 பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஆனால் இந்த ஆராய்ச்சி குழந்தைகளுக்கு இந்த வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதையும், சிலருக்கு அதிக அளவு கவனிப்பு தேவை என்பதையும் நினைவூட்டுகிறது. இந்த ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை நோயாளிகள் பற்றிய நமது புரிதலை முற்றிலுமாக மாற்றும். ஆனால், வைரஸ் உண்மையிலேயே குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை” என்றார்.

New study from pandemic epicenter describes severe COVID-19 response in children
குழந்தைகளை பாதிக்கும் கோவிட்-19 குறித்து விளக்கும் புதிய ஆய்வு!

இந்த ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் குழந்தை நோயாளிகளில் கோவிட்-19 பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகின்றன. ஆனால், வைரஸ் உண்மையில் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படிங்க : சீனாவிலிருந்து சென்னை வந்த பூனை: 3 மாதம் தனிமைப்படுத்தல் முடிந்து விடுவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.