இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசியை வாங்குவது குறித்து மெக்சிகோ நாட்டின் மருந்துவ நிபுணர்கள் பரிசீலனை செய்துள்ளனர்.
இந்தப் பரிசோதனையின் முடிவுகளை ஆராய்ந்து பாா்த்தபோது, கரோனாவை தடுப்பதில் கோவேக்ஸின் தடுப்பூசி 80 விழுக்காடு வீரியத்துடன் செயல்படுவது தெரியவந்தது. இதனடிப்படையில் மெக்சிகோவின் கூட்டாட்சி மருத்துவ பாதுகாப்பு ஆணையத்தின் (Federal medical safety commission) அங்கீகரிக்கும் குழுவிற்கு கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவது குறித்து மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் இது மெக்சிகோவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஐந்தாவது தடுப்பூசியாக இருக்கும். மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை (மார்ச்5) மட்டும் 715 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மெக்சிகோவில் 6 ஆயிரத்து 800 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுள்ளது, இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா நிலவரம்: நாட்டில் ஒரேநாளில் 18,327 பேர் பாதிப்பு