லிமா நகரின் சான் ஜுவான் போஸ்கோ பகுதியில் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மரத்தினாலான எரியக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டவை என்பதால் வேகமாக பரவிய தீயால் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.
தீ விபத்து பற்றி லிமா நகரின் தீயணைப்புத்துறை உயரதிகாரி லாரி லிஞ்ச், சான் ஜுவான் போஸ்கோ பகுதியில் 200 வீடுகளுக்கு மேல் தீயினால் எரிந்து நாசமாயின. இது காற்று அதிகமாக வீசக்கூடிய பகுதி என்பதால் தீ வேகமாக பரவியுள்ளது. நீர்ப் பற்றாக்குறை மற்றும் மரத்தினலான பொருட்கள் அதிகமாக இருந்த காரணத்தால் தீயை அணைக்க தாமதமானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறினார்.