அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக பதவி ஏற்கவுள்ளவர் கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கு, சமையல் மீது தனி ஈடுபாடு உண்டு. இதை இவரே பொதுமேடைகளில் பல முறை சொல்லியுள்ளார்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் தேங்க்ஸ் கிவ்விங் டே அன்று தான் செய்யவிருக்கும் தனது குடும்ப ரெசிபியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "நான் வாழ்வில் கடிமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதெல்லாம் என் மனத்தை சமையல் பக்கம் திருப்பினேன்.
இந்த ஆண்டு, எனது குடும்பத்திற்கு பிடித்த தேங்க்ஸ கிவ்விங் டோ ரெசிபி ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதைச் செய்யும் போதெல்லாம், அது எனக்கு அளித்த அரவணைப்பை உங்களுக்கும் தரும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க நாடுகளில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வியாழக்கிழமை தேங்க்ஸ் கிவ்விங் டே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கேள்விகள் இல்லை, நக்கல் இல்லை : கப்சிப் என்று நடந்து முடிந்த ட்ரம்பின் தேங்க்ஸ் கிவ்விங் நிகழ்ச்சி!