சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்துவிட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்த வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி நான்கு கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 375க்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 05 ஆயிரத்து 206 க அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை மூன்று கோடியே 37 லட்சத்து 54 ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகிலேயே அதிகளவு பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா தொடர்கிறது. தொடர்ச்சியாகத் தினமும் 800க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு உயிரிழந்துவருகின்றனர். இதுவரை 94 லட்சத்து 73 ஆயிரத்து 911 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 36 ஆயிரத்து 471 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடக்க உள்ள நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அமெரிக்காவில் அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய(நவம்பர்-1) நிலவரப்படி 46 ஆயிரத்து 441 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 லட்சத்து 29 ஆயிரத்து 322ஆக அதிகரித்துள்ளது. 3 ஆவது இடத்தில் உள்ள பிரேசிலில் 55 லட்சத்து 45 ஆயிரத்து 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.